கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நிதின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதனால் தன் படத்திற்கான கதை தேர்வில் பெறும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் மீண்டும் நிதின் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் 30ம் தேதி நிதின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிதின் ,வெங்கி குடுமுலா, ராஷ்மிகா கூட்டணியில் வெளியான பீஷ்மா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .