தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

இந்தாண்டு துவக்கத்தில் ‛துணிவு' என்கிற படத்தின் மூலம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதற்கு அடுத்ததாக மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள வெள்ளரி பட்டணம் என்கிற படம் வரும் மார்ச் 24 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்தபோதுதான் தனது இரு சக்கர வாகன உரிமத்தை மஞ்சு வாரியர் பெற்ற நிகழ்வு வைரலானது.
அதேசமயம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் பஞ்சாயத்து தலைவர் என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தான் நடித்துள்ளார். இது குறித்து மஞ்சு வாரியர் கூறும்போது, “எனக்கு சேலை அணிவது ரொம்பவே பிடிக்கும். சமீபத்தில் நான் சேலை அணிந்து வெளியிட்ட பதிவுக்கு பல லட்சம் லைக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள சுனந்தா கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. ஒரு பெண் அரசியல்வாதி என்றால் சேலைதான் அணிய வேண்டுமா என்று கேள்வி கேட்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் இயக்குனர் மகேஷ் வெட்டியாரும் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சமீராவும் வித்தியாசமான ஆடைகளை எனக்காக உருவாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.