மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
தேசிய விருது பெற்ற அன்னயும் ரசூலும், கம்மட்டி பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. இவரது மனைவி நடிகை கீது மோகன்தாஸும் இயக்குனர் தான். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. சில பிரச்சினைகள் காரணமாக அந்த படம் பாதியில் நிற்க, தனது மனைவி நிவின்பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் என்கிற படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய போய்விட்டார் ராஜீவ் ரவி. அந்த படமும் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது துறமுகம் படம் இன்று(மார்ச் 10) வெளியாகி இருக்கிறது. இந்த படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட் தான் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நிவின்பாலி. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் குறித்து எங்கேயும் விமர்சித்தோ எதிர்மறையாகவோ பேச விரும்பாதவர் நிவின்பாலி. அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படி மனம் நொந்துபோய் கூறியுள்ளார்.
இந்த படம் தாமதமானது குறித்து பேசும்போது, “படம் துவங்கிய சமயத்தில் பிரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 70 சதவீத லாபத்தை சம்பாதித்து விட்டது. லாபத்தின் மீது மட்டுமே குறிக்கோள் இல்லாத ஒரு நல்ல தயாரிப்பாளராக இருந்திருந்தால் படம் எப்போதோ முடிந்து எளிதாக வெளியாகி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் எப்போது இந்த படம் துவங்கப்படும் என தெரியாமல் இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இந்த படத்திற்கு பொருளாதார உதவி செய்து தற்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளதற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் நிவின்பாலி.