''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் இந்த வாரம் நிவின்பாலி நடித்த துறைமுகம் என்கிற படம் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் நடித்த கம்மட்டி பாடம் உள்ளிட்ட விருது படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களுடன் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் 2018ல் துவங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன நிலையில் ரொம்பவே தாமதமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நிவின்பாலி இந்த படம் இவ்வளவு தாமதம் ஆனதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் தான். படத்தின் துவக்கத்திலேயே பிரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் கிடைத்த தொகையில் இந்த படத்தை அவர் குறித்த நேரத்தில் எடுத்து முடித்திருக்கலாம். அவரது இயலாமையால் எடுத்துக்கொண்ட வேலையை அவர் சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது படம் வெளியானதை தொடர்ந்து இதுகுறித்து மனம் திறந்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட் கூறும்போது, “இந்த படம் தற்போது ரிலீசாகி இருப்பதை தொடர்ந்து வருத்தம், பிரச்சனை, அவமானம் என அனைத்திற்கும் ஒரு முடிவை கொண்டுவந்துள்ளது. இந்த படத்தை தயாரிப்பதற்கு எனக்கு தகுதி இல்லை, நான் பணத்தாசை பிடித்தவன் என்பது போல இந்த படத்தில் பணியாற்றிய பலரும் பேசினார்கள். நான் சென்னையில் சாதாரண ஒரு தயாரிப்பு நிர்வாகியாக டூவீலரில் பெட்ரோல் போடுவதற்கு கூட பணம் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவன்.. காரணம் சினிமா என்பது மட்டுமே எனது வாழ்க்கையாக, நோக்கமாக இருந்தது. அதைத்தாண்டி வேறு ஒன்றையும் நான் யோசிக்கவில்லை. அதனால் தான் என்னுடைய உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் இந்த படத்தில் மொத்தமாக கொட்டினேன்.
இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்ய முயற்சிக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு சிலர் அதற்கு ஏதோ ஒரு ரூபத்தில் தடங்கல்களை உண்டாக்கி முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இதனால் அதிகரித்த பொருளாதார சுமை இந்த படத்தின் ரிலீஸை தள்ளிப்போட வைத்து விட்டது. அவர்கள் பெயரை இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்பவில்லை. சிலருக்கு குறித்த நேரத்தில் பணம் கொடுக்க முடியவில்லை என்பதற்காக நானும் சின்னச்சின்ன பொய்கள் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக நிறைய பேரிடம் கடன் வாங்கி தான் சமாளித்தேன்.
இது அனைத்துமே சினிமா மீது நான் கொண்ட காதலால் தான்.. அதேபோல நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு உதவியாகவும் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பெயரையும் கூட நான் இங்கே சொல்ல விரும்பவில்லை.. நான் சாகும் வரை சினிமாவில் இருக்க விரும்புகிறேன். அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கிறேன். நீங்கள் துறமுகம் படத்திற்காகவும் ரவி ஏட்டனுக்காகவும் (இயக்குனர் ராஜீவ் ரவி) நிச்சயமாக பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவில் படத்தின் நாயகன் நிவின்பாலியை குறிப்பிடாமல் தவிர்த்து இருப்பதை பார்க்கும்போது சமீபத்தில் நிவின்பாலி அவர்மீது வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளதாகவே உணர முடிகிறது.