போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இவங்க மட்டும்தான் காதலிச்சாங்களா? இவங்க மட்டும்தான் சந்தோஷமாக இருக்காங்களா? இவங்க மட்டும் ஐடியல் தம்பதிகளா என்று ஊரே திட்டும், விமர்சிக்கும் அளவுக்கு அடிக்கடி போட்டோ வெளியிடுவார்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர். புத்தாண்டு, காதலர் தினம், தீபாவளி, பொங்கல், ஓணம், அவர்களின் பிறந்தநாள் என ஏதாவது காரணத்தை சொல்லி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி வெளிநாடு சென்றும் போட்டோசெஷன் எடுப்பார்கள்.
யார் கண் பட்டதோ. கடந்த சில போட்டோ செஷன்களில் நயன்தாரா மட்டுமே இருக்கிறார். விக்னேஷ் சிவன் மிஸ்சிங். என்னாச்சு? பிரிவா? ஊடலா? தொழில் சிக்கலா? என்று சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து அவர்கள் தரப்பில் கேட்டால் '' தான் இயக்கும் எல்ஐகே பட வேலைகளில் விக்னேஷ் சிவன் பிஸி. அதனால், போட்டோசெஷனில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி வேறு எதுவும் இல்லை. ஒரு போட்டோவில் இரண்டுபேரும் இல்லாதது குற்றமா? திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டது'' என்று சிரிக்கிறார்கள்.