லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங் தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் கபீர் துஹான் சிங்.. மூன்று விதமான காலகட்டங்களில் நடக்கும் இந்த படத்தில் இவரும் இரண்டு வித காலகட்டங்களில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்தப்படத்தில் டொவினோ தாஸுடன் வாள் சண்டை காட்சிகளிலும் முதன்முறையாக நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளா கபீர் துஹான் சிங். மலையாள திரையுலகில் நுழைவதற்கான சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படமும் கதாபாத்திரமும் அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.