'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
துணிவு படத்தை அடுத்து அஜித்குமார் நடிக்கும் 62 வது படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட பல படங்கள் இயக்கிய மகிழ் திருமேனி இயக்கப் போகிறார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்தை போலவே ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கும் விஜய்யின் லியோ படத்தை போலவே ஆங்கிலத்தில் டைட்டில் வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் 62வது படத்திற்கு டெவில் என்று டைட்டில் வைத்திருக்கிறார்களாம். இதற்கு முன்பு மகிழ்திருமேனி தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து வந்தார். என்றாலும் இந்த படம் லியோவுக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்பதால் அதே பாணியில் ஆங்கிலத்தில் டெவில் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.