'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என எப்போதோ செய்திகள் வெளிவந்துவிட்டது. முதலில் அப்படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கூட அவரது சமூக வலைதளங்களில் 'அஜித் 62' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், அஜித்திற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தான் எழுதிய கதையின் இரண்டாவது பகுதி தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை, மகிழ் திருமேனி படத்தை இயக்குவது மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அஜித் 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அஜித்தின் அப்பா மறைவு காரணமாகக் கூட அறிவிப்பு தள்ளிப் போயிருக்கலாம். ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும், மே மாதம் ஆரம்பமாகும் என்றுதான் படத்தைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் படத்தின் திரைக்கதையை மகிழ் திருமேனி இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை என்று கூட சொல்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்தும் தாமதப்படுத்துகிறார் என்கிறார்கள். அவர் தரப்பில் ஓகே என்று சொன்ன பிறகு, படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் திருப்தி என்றால்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.