ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
நடிகர் தனுஷ் நடித்திருந்த யாரடி நீ மோஹினி, குட்டி , உத்தமபுத்திரன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். இப்படங்களை தொடர்ந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான இந்த படம் வெற்றியை பெற்று தந்தது .
திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதில், நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . வழக்கமாக மித்ரன் ஜவஹர் படங்கள் என்றாலே கதையோ, திரைக்கதையோ வேறு ஒருவர் எழுதுவார்கள் . அதேபோல் இந்த படத்திலும் திரைக்கதை பணிகளை ஜெயமோகன் மேற்கொள்கிறார் .