ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் கூட இளம் நடிகைகளுக்கு சவால் விடும்படியாக மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்த இவர், கடந்த மாதம் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித்துடனும் இணைந்து நடித்து இருந்தார்.
இந்த படத்தில் அவர் நடித்து வந்த சமயத்தில் அஜித் மற்றும் அவரது பைக் நண்பர்கள் குழுவின்ருடன் இணைந்து கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டருக்கு மேல் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பயணம் மேற்கொண்டார். ஆனால் அந்த சமயத்தில் அவர் பில்லியனில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்து, சமீபத்தில் தான் அதற்கான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றார்.
இந்த நிலையில் அதன் அடுத்த படியாக, தற்போது விலை உயர்ந்த பி எம் டபிள்யு ஜிஎஸ் 1250 என்கிற புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார் மஞ்சு வாரியர். இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்த பைக்கை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதில் இருந்து ஷோரூமுக்கு சென்று பைக்கை பார்வையிட்டு, அதன்பிறகு கெத்தாக அந்த பைக்கில் அமர்ந்து ஓட்டிச்செல்வது வரை ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார் மஞ்சு வாரியார்.
இது குறித்து மஞ்சு வாரியர் கூறும்போது, “தைரியத்தின் ஒரு சின்ன முயற்சி எப்போதுமே நல்ல இடத்தை பெறும். ஒரு மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு நான் ஒரு நல்ல ரைடராக மாறியுள்ளேன். அதனால் சற்று தடுமாறியபடி வாகனம் ஓட்டி வரும் என்னை சாலையில் பார்த்தாலும் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ள மஞ்சு வாரியர், “என்னை போன்ற பலருக்கும் உடனிருந்து உற்சாக தூண்டுதலாக இருந்த அஜித் குமாருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.




