எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகர்களை தமிழுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு வில்லன் நடிகராக சென்றவர் தியாகராஜன்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவர் ஆக்ஷன் படங்களில்தான் நடித்தார். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், எரிமலை, ராஜா யுவராஜா, முரட்டுக் கரங்கள் என ஆக்ஷனில் அதகளம் செய்து கொண்டிருந்தார்.
இப்படியான நேரத்தில்தான் மலையாளத்தில் வெளியான 'நியூ டெல்லி' படத்தில் வில்லனாக அறிமுகமானார். உடம்பு முழுவதும் சங்கிலியால் கட்டி திகார் சிறையில் தியாகராஜனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே பொறி பறக்கும். ஹீரோ மம்முட்டிக்கு கூட அப்படியொரு அறிமுகம் இல்லை. 'சேலம் விஷ்ணு' என்ற தமிழ் பேசும் கிரிமினலாக இதில் அவர் நடித்தார்.
படம் பெரிய வெற்றி பெறவே அதனை 'தெலுங்கில் 'அந்திம தீர்ப்பு' என்ற பெயரிலும், ஹிந்தி, கன்னடத்தில் 'நியூ டெல்லி' என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். இந்த மூன்று ரீமேக்கிலும் நடித்த ஒரே நடிகர் தியாகராஜன் மட்டுமே. சேலம் விஷ்ணு கேரக்டரில் அவர்தான் நடித்தார்.
அதன்பிறகு 1990ம் ஆண்டு 'சேலம் விஷ்ணு' என்ற பெயரில் அவரே ஒரு படத்தை இயக்கி நடித்தார். இந்த வருடம்தான் அவரது மகன் நடிகர் பிரசாந்த் 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமானார்.