பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

இன்றைக்கு உலகின் டாப் இயக்குனராக கருதப்படுகிறவர் கிறிஸ்டோபர் நோலன். அவரது இன்டர்ஸ்டெல்லர், இன்செப்ஷன், டெனட், தி டார்க் நைட் டிரைலாஜி, தி பிரஸ்டீஜ் ஆகிய படங்கள் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
கடைசியாக அவர் இயக்கிய படம் 'ஓப்பன் ஹெய்மர்'. அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கினார். ஆரம்பத்தில் தியேட்டரில் ஈ ஓட்டிய இந்தப் படம் பின்னர் வசூலை குவித்து ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது.
இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அடுத்து வருடம் படம், 'தி ஒடிஸி'. அடுத்த ஆண்டு ஜூலை 17ம் தேதி வெளிவருகிறது. மேட் டாமன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்துவிட்டது. ஐ-மேக்ஸ் திரைக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதாம். இதுவரை ஒரு வருடத்துக்கு முன்பாக எந்த படத்துக்கும் டிக்கெட் ரிசர்வேஷன் நடந்தது கிடையாது. முதல் முறையாக இந்த படத்துக்கு தான் இதுபோல் நடந்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.