'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கருப்பு வெள்ளை காலத்து திரைப்பட நடிகைகளின் அடிப்படை தகுதியே நடனம்தான். நடனம் ஆடத் தெரியாதவர்களால் சினிமா நடிகையாக முடியாது. லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் சினிமாவில் நடனமாடி பின்னர் நடிகை ஆனவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நடனத்தை விட்டு விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி விடுவார்கள். ஆனால் நடத்தின் மீதுள்ள ஆர்வத்தால் அதன் மீது அதிக கவனம் செலுத்தி சினிமாவை இழந்தவர்களும் உண்டு. அவர்களில் முக்கியமானவர் பி.கே.சரஸ்வதி.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த எர்ணாகுளம் அருகே உள்ள திருப்பூணித்துறை என்ற ஊரைச் சேர்ந்தவர் பி.கே.சரஸ்வதி. பரவேலி என்பது இவரது இயற்பெயர். தந்தை குமாரன் நாயர் கொச்சி சமஸ்தான படையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார் நாராயணி அம்மையாரின் பொறுப்பில் வளர்ந்தார்.
புகழ் பெற்ற நடன ஆசிரியர் மாதவ மேனனிடம் முறைப்படி நடனம் கற்றார். 'பழசி ராஜா' 'சாகுந்தலம்' ஆகிய நாட்டிய நாடகங்களில் நடனமாடிப் புகழ் பெற்றார். இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று நடனமாடியுள்ளார். மும்பை 'சவன் ஆர்ட் சென்டர்' என்ற கலைக்கழகத்தில் படித்து நாட்டிய பட்டம் பெற்றார்.
'கல்பனா' என்ற ஹிந்தித் திரைப்படத்தில் தனது நடனம் மூலம் திரையுலகில் நுழைந்தார். தமிழில் திருமழிசை ஆழ்வார், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்ற பல படங்களில் நடனமாடி நடித்தார். ராஜாம்பாள் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். 'அந்தமான் கைதி' என்ற படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். என்றாலும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் நாட்டியத்தில் கவனம் செலுத்தியதால் 23 படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் கடைசி வரை நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.