'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காஞ்சனா 3 படத்தை அடுத்து ருத்ரன், சந்திரமுகி- 2, துர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் சமீபத்தில் தான் பார்த்த டாடா என்ற படம் தன்னை எமோஷனலாக டச் பண்ணி விட்டதாக தனது டுவிட்டரில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். கவின், அபர்ணாதாஸ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள இந்த டாடா படத்தை பார்த்த கமல்ஹாசன், சூரி உள்பட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், தற்போது ராகவா லாரன்சும், இந்த டாடா படம் எமோஷனலாக என்னை டச் பண்ணி விட்டது. இது ஒரு பக்காவான பேமிலி செண்டிமெண்ட் படம். அனைவரும் தியேட்டரில் பாருங்கள். இந்த படத்தை தயாரித்த அம்பேத்குமார், சிறப்பான திரைக்கதை எழுதி படத்தை இயக்கிய கணேஷ் பாபு, நடிகர் கவின், நடிகை அபர்ணாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார் .