சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
துணிவு படத்தை அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படத்தின் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே தான் இயக்கிய நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு ஆக்சன் கதையை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.