கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா - த ரூல்' படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமானது. சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தற்போது விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்குள்ள துறைமுகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
'புஷ்பா 2'க்காக அல்லு அர்ஜுன் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் புதிய தோற்றத்தில் கலந்து கொண்டுள்ளார். 90களில் பிரபலமாக இருந்த 'பங்க்' ஹேர்ஸ்டைலுடன் அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த வீடியோக்கள் ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 90களில் நடக்கும் கதை என்பதால் தான் அந்த 'பங்க்' ஹேர்ஸ்டைல் என்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல்தான் படத்தின் மையக்கருவாக இருக்கும் எனத் தெரிகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவுடன் எடுக்கிறார்களாம்.