நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படத்தில் இடம் பெற்ற 'ரஞ்சிதமே' பாடல் சூப்பர் ஹிட் ஆன பாடலாக அமைந்துவிட்டது. படத்தின் முதல் சிங்கிளாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்பாடல் யு டியூபில் வெளியானது. இரண்டு மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
விவேக் வரிகளில் ஜானி நடன அமைப்பில், விஜய்யும், ராஷ்மிகாவும் இப்பாடலுக்கு நடனமாடிய வேகத்தைப் பார்த்து படம் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். விஜய்யின் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த தமன், இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
விஜய் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் பாடல்களில், 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து', 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' 'குட்டி ஸ்டோரி', 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்', 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்', 'தெறி' படத்தின் 'என் ஜீவன்', ஈனா மீனா டீக்கா', ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளன.
சமீபத்தில் 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் 500 மில்லியனைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் 416 மில்லியனைக் கடந்துள்ளது.