ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

ஜெயம்ரவி, நயன்தாரா நடித்து முடித்துள்ள படம் இறைவன். வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை இயக்கிய ஐ.அகமத் இயக்கி உள்ளார். ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோ சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்துள்ளனர். தற்போது படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது: ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். படம் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்.
இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன ஆகிய படங்களைப் போலவே இறைவன் படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இறைவன் படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன். என்றார்.




