'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ‛ஆர்.ஆர்.ஆர்' படம் உலக அளவில் மெகா ஹிட் ஆனது. அந்த படத்தில் இடம்பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலுக்கு உயரிய கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஜூனியர் என்டிஆர் அளித்த பேட்டி: எனக்கு ஹாலிவுட் மார்வெல் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. அந்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். மார்வெல் கதாபாத்திரங்களில் எனக்கு அயன்மேன் மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மார்வெல் உயர் அதிகாரி விக்டோரியா அலோன்சாவை ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மார்வெல் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.