23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
விஜய் நடித்த வாரிசு படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, பிரபு, சங்கீதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசை அமைத்திருந்தார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூலில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 250 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 5 நாளில் ரூ.150 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர் சென்னை நட்சத்திர ஓட்டலில் வெற்றி விழாவை கொண்டாடினார்கள். இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா தவிர மற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வம்சி, “படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யிடம் இந்தக் கதை சொல்லும்போது, 'நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்' என சொன்னேன்.
என்னை பலரும் தெலுங்கு இயக்குநர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. 'இது பக்கா தமிழ் படம்' என்பதைத்தான் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என்றார்.