'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரவீனா, தமிழில் சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது 'இனியா' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். சென்ற வருடம், பிரவீனாவின் புகைப்படங்கள் சில, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவர் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழகத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் விடுதலையானதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பிரவீனா மட்டுமில்லாமல் அவருடைய மகளின் புகைப்படங்களும் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பிரவீனா சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை செய்து குற்றவாளியான பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர். கைதான பாக்யராஜூக்கு 22 வயது தான் என்பதுடன் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.