சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சின்னத்திரை நடிகையான ரோஜா ஸ்ரீ, சமீபகாலங்களில் வைரல் நாயகியாக இணையத்தை கலக்கி வருகிறார். அதற்கு காரணம் விஜய் டிவி நிகழ்ச்சியில் அவர் செய்த பெர்பார்மன்ஸும் தொடர்ந்து அது குறித்து பேட்டிகளில் அவர் செய்த ஆக்டிங்கும் தான். அந்நிகழ்ச்சியின் டீஜேவான ப்ளாக் என்பவரை காதலிப்பது போலவும், அது தோல்வியடைவது போலவும் வரிசையாக சேனல்களில் நடித்துக்காட்டி ஒருபுறம் கைதட்டல்களை பெற்று வருகிறார். ஆனால், மறுபுறம் ரோஜா ஸ்ரீயின் இந்த சேட்டைகள் சம்பந்தபட்ட நபரான டீஜே ப்ளாக்கிற்கு பிரச்னையாக வந்துள்ளது.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள டீஜே ப்ளாக், 'என்னுடைய வேலை அந்த நிகழ்ச்சியில் யார் வந்தாலும் பாட்டு போடுவதுதான். அதுபோல தான் ரோஜா ஸ்ரீக்கும் அவர் பெயரிலேயே பாட்டு போட்டேன். அது ஓரளவுக்கு நிகழ்ச்சிக்கு செட்டானது. அதேசமயம் அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து தவறாக சென்று கொண்டிருக்கிறது. ரோஜா ஸ்ரீ முதலில் பேட்டி கொடுக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த பேட்டிகளில் லவ், ரிலேஷன்ஷிப், ப்ரேக்-அப் என தம்ப்னைல் வைத்து வேறுமாதிரி மாற்றிவிட்டனர். உண்மையை சொன்னால், ரோஜா எனக்கு ஒரு ஹாய் கூட சொல்லியது கிடையாது. ஆனால், பேட்டிகளில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த விஷயம் என்னுடைய குடும்பத்தில் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் நிகழ்ச்சிக்காக மட்டும் தான் அப்படி செய்தேனே தவிர எனக்கும் ரோஜா ஸ்ரீக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என கூறியுள்ளார்.