ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சின்னத்திரையில் சித்தி , அண்ணாமலை, மெட்டிஒலி உட்பட பல தொடர்களுக்கு இசையமைத்தவர் தினா. அதன் பிறகு சினிமாவிலும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் அவரது இசையில் உருவான மன்மதராசா பாடல் மற்றும் விஜய் நடித்த திருப்பாச்சியில் இடம்பெற்ற கும்பிட போன தெய்வம் உள்ளிட்ட பல பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி எடுத்தன. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த கட்சியின் போராட்டங்கள் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு வந்தார் இசையமைப்பாளர் தினா.
இந்த நிலையில் சமீபத்தில் பாரதி ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்து வந்த நடிகையும் நடன மாஸ்டருமான காயத்ரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருந்தார் பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை. அதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காயத்ரி ரகுராம் வகித்த வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி துறையின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தினாவை நியமனம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.