ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடுதலை 2'. இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'தினம் தினமும்...' பாடல் சற்று முன் வெளியானது. இளையராஜா எழுதி, அனன்யா பட் உடன் இணைந்து பாடியுள்ள பாடல். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் இடையிலான ஒரு காதல் பாடலாக இப்பாடல் படத்தில் இடம் பெறும் என்பது அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் தெரிய வருகிறது.
இளையராஜாவின் உணர்வுபூர்வமான குரலில், தெளிவான வார்த்தை உச்சரிப்புடன், அனன்யா பட்டின் அருமையான குரலுடன் பாடலில் உள்ள வரிகளான 'தினம் தினமும் உன் நினைப்பு, வளைக்கிறதே, என்னைத் துளைக்கிறதே,' என்பது போல் பாடம் தினம் தினமும் கேட்டு நம்மைத் துளைக்கும் விதத்தில் இருக்கும் என்பது உறுதி.
யு டியூபிலும் வெளியாகி உள்ள இந்தப் பாடலின் கமெண்ட்டுகளைப் படிக்கும் போது அது இன்னும் உறுதிப்படுத்தப்படுகிறது. 'விடுதலை' முதல் பாகத்தில் இடம் பெற்ற 'வழி நெடுக காட்டுமல்லி' சாயலில் இந்தப் பாடல் இருந்தாலும் முதல் முறை கேட்கும் போதே நம்மைப் பாடலுக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது.