விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'கங்குவா'. இப்படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை விடவும் நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகமாக வந்தது.
இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையும், சினிமா தயாரிப்பாளருமான ஜோதிகா இன்ஸ்டா தளத்தில் படம் பற்றி அவரது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். அதே சமயம், 'கங்குவா' படம் பற்றி வந்த விமர்சனங்களைப் பற்றியும் அவரது விமர்சனத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர் சூர்யாவின் மனைவியாக இல்லாமல், ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சினிமாவில் 'கங்குவா' ஒரு அதிசயம். சூர்யா, உங்களைப் பற்றிப் பெருமையாக இருக்கிறது. நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லவும் நீங்கள் எப்படி கனவு காண்கிறீர்கள் சூர்யா.
படத்தின் முதல் அரை மணி நேரம் நிச்சயம் பலனளிக்காது. ஒலி மிகவும் இரைச்சலாக உள்ளது. இந்தியத் திரைப்படங்களில் குறைகள் என்பது பெரும்பாலும் இருக்கும். அது மிகவும் நியாயமானதும் கூட. குறிப்பாக இது போன்ற படங்களில் பெருமளவில் பலரும் பரிசோதனை செய்கின்றனர். முதல் அரை மணி நேரத்திலிருந்து கடைசி மூன்று மணி நேரம் வரை.
ஆனால், உண்மையில் இது ஒரு மிகச் சிறந்த சினிமா பார்க்கும் அனுபவம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஒளிப்பதிவு வேலையைக் கொண்டு சென்றதைப் பார்த்ததில்லை.
ஊடகங்களில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பழமையான கதைகள், பெண்கள் பின்னால் சுற்றுவது போன்றவை, இரட்டை அர்த்த வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் என அறிவுத்தனமில்லாத சில பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் இப்படி செய்யவில்லை.
கங்குவா படத்தில் உள்ள நேர்மறையானவற்றைச் சொல்லியிருக்கிறார்களா ?. இடைவேளைக்குப் பின் வரும் பெண்கள் சண்டையிடும் காட்சி, கங்குவா மீது அந்த சிறுவனுக்கு உள்ள அன்பு, துரோகம் ஆகியவற்றை அவர்கள் விமர்சனம் செய்யும் போது மறந்துவிட்டார்களா ?.
ஒருவர் படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா அல்லது நம்ப வேண்டுமா என இப்போது எனக்கு ஆச்சரியமாகக் கேட்கத் தோன்றுகிறது. கங்குவா படத்தின் முதல் நாளிலேயே இப்படியான அதிக எதிர்மறையானவற்றை சிலர் தேர்வு செய்வது வருத்தமாக உள்ளது.
அற்புதமான காட்சிகள் 3டி உருவாக்கம் என இப்படியான கருத்தை உருவாக்க அவர்கள் முயற்சித்ததற்கு பாராட்ட வேண்டும்.
'கங்குவா' குழுவினரே பெருமையாக இருங்கள். எதிர்மறை கருத்துக்களைச் சொல்பவர்கள் ஏதோ சொல்கிறார்கள், அவர்கள் சினிமாவின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்வதில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.