சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரியில், 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து 2 ஆண்டுகளாக 'என்ஓசி' வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தனுஷ் பற்றியும் நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தபோது, நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரெளடிதான் பட பாடலை சில வினாடிகள் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உண்மை தான் என தெரியவந்தது. அதேநேரத்தில் ஆவணப்படத்தை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு நயன்தாரா ரூ.60 கோடிக்கு மேல் ஆவணப்படத்தை விற்றுள்ளதும் தெரியவந்தது. படத்தை பணத்திற்கு விற்றவரிடம், அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக பணம் கேட்டதில் தவறில்லை என்கிறது தனுஷ் ரசிகர்கள் தரப்பு.
ஆனால், தனுஷ் பற்றி நயன்தாரா பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது, இது வெறும் நானும் ரெளடிதான் படம் பற்றிய பஞ்சாயத்து மட்டுமல்ல என்பது ஓரளவு தெரிகிறது. இது பற்றி தகவலறிந்தவர்களிடம் விசாரித்ததில், உத்தம புத்திரன் படப்பிடிப்பின் போது, பாண்டிச்சேரியில் இருந்தபோது தனுஷ், அங்குவந்த நயன்தாராவிடம் நெருக்கமான தோழமையோடு இருந்துள்ளார்.
நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்காமல் 2 மடங்கு அதிகமாக செலவை விக்னேஷ்சிவன் இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தனுஷ், தான் தயாரிப்பாளர் ஆனாலும் எந்த நிகழ்ச்சிக்கும் இவர் வராமல் இருந்தார். இதுபற்றி அதிகம் பேசவில்லை. அதற்கு நயன் - விக்கி காதலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தன்னை பெரும் சுமைக்கு இழுத்துச் விட்டதாக நினைத்தார். இருவருக்குமிடையிலான வாழ்க்கையில் விக்னேஷ் சிவன் வந்ததில் இருந்து, நிறைய மன கசப்புகள் இருவருக்குள்ளும் வந்திருக்கிறது. இதனால் தனுஷ் அன்று முதல் தன் நட்பை இருவரிடமும் முறித்துக் கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆவணப் படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடி கொள்கிறார் நயன்தாரா என்றும் சிலர் சொல்கின்றனர்.
பெரும் விவாதத்திற்கு உள்ளான இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தனுஷ் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது: ‛‛இந்த தகவல் தாமதமாகதான் எனக்கு கிடைத்தது. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் முன்னே ஓடிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு வேலை தான் முக்கியம். பின்னால் துரத்துபவர்களையோ, பின்னால் பேசுபவர்களையோ பற்றி சிந்திக்கவோ பதில் கொடுக்கவோ நேரம் இல்லை. என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துவான். தற்போது ‛இட்லி கடை' படப்பிடிப்பு வேலையில் இருக்கிறார். எனக்கு தெரிந்து நயன்தாரா சொன்னது போல் இரண்டு ஆண்டு காலம் காத்திருந்தது என்பதெல்லாம் உண்மையான செய்தி அல்ல. இதைப்பற்றி பேச வேண்டாம் என்று நான் தவிர்க்கிறேன்.''என்றார்.
எனவே, தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாரா கடிதத்திற்கு பதில் அளிக்கவோ, மறுப்பு தெரிக்கவோ மாட்டார் என்றே தெரிகிறது. இவற்றை கண்டுகொள்ளாமல் பட வேலைகளில் பிஸியாக இருந்துவருகிறார் தனுஷ்.