தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை | பிளாக்பஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லை : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகர் | திரைப்பட எழுத்தாளர் வேலுமணி காலமானார் | ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட் |
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார். படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட, பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியானது. விவேக் எழுதி, நடிகர் சிம்பு பாடியுள்ள இப்பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். 30 வருடங்களை நிறைவு செய்திருக்கும் விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலின் வரிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.