வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது.
மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் கேரளாவில் இன்று படம் வெளியானாலும் தமிழகத்தில் ஒரு நாள் தள்ளி நாளை (டிச-2) தான் வெளியாக இருக்கிறது. தமிழிலும்கூட வியாழன் அன்றே படங்கள் வெளியாகும் வழக்கம் இருந்தாலும், இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து கோல்டு படமும் அதே தேதியில் வெளியாகிறது.