'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
சசிகுமார் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களில் ‛நான் மிருகமாய் மாற, காரி' என இரண்டு படங்கள் வெளியாகின. அடுத்து ‛நந்தன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கி உள்ளார். சசிகுமார் ஜோடியாக 'பிக் பாஸ்' புகழ், நடிகை சுருதி பெரியசாமி நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை உதயநிதி வெளியிட்டார். இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடித்திருக்கிறாராம்.