‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

நடிகர் அஜித் தற்போது 3வது முறையாக வினோத் இயக்கத்தில் துணிவு என்கிற படத்தில் நடித்து வந்தார். போனி கபூர் தயாரிப்பில், மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் கடந்த சில நாட்களாக சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கல்யாண் மாஸ்டரும் படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் வெள்ளை நிற தாடியுடன் நடித்து வந்த அஜித், படப்பிடிப்பு முடிந்த உடனே தனது தாடி மீசையை எடுத்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். படக்குழுவில் பணியாற்றிய நபர் ஒருவர் அஜித் தாடியுடன் இருக்கும்போதும் அதை அகற்றிய பின்னரும் என அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தன் பங்கிற்கு இதை உறுதி செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.