நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத ராம்சரணின் இந்த 15வது படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கிய ஷங்கர், இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி இயக்கி வந்தார்.

அந்தவகையில் நியூசிலாந்தில் ராம்சரண், கியாரா அத்வானி இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தார் ஷங்கர். இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். ஷங்கர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக உப்பென்னா இயக்குனர் புஜ்ஜிபாபு சேனா டைரக்சனில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் ராம்சரண்.