அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமலே உள்ளது.
இதனிடையே, இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள பார்ஸ் பிலிம் கம்பெனி தாங்கள் இப்படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறோம் என்ற அறிவிப்புடன் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று தேதியையும் குறிப்பிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஏற்கெனவே 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதியில்தான் வெளியாகும் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைத் தற்போது வெளிநாட்டு வினியோகஸ்தர் உறுதி செய்துள்ளார். அஜித்தின் 'துணிவு' படம் ஜனவரி 13 வெளியாகும் என்றும் செய்திகள் வந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.