100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூலித்தது.
அப்படத்தைத் தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்றும், நாளையும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் படத்திற்கான பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன.
இதற்காக புஷ்பா படக்குழுவினர் ரஷியா சென்றுள்ளனர். அங்கு நேற்றே தங்களது பிரமோஷன் பேட்டிகளை ஆரம்பித்துவிட்டனர். இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.