“மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம் | மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள் |
'நேரம், பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் 'கோல்டு'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், டப்பிங் வேலைகள் தாமதமான காரணத்தால் இன்று படம் வெளியாகாமல் போய்விட்டது.
காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழில் நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளங்களில் தமிழ் பதிப்பிற்கான இன்றைய முன்பதிவையும் ரத்து செய்துவிட்டனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை கோவை சுப்பையா என்ற வினியோகஸ்தர் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தமிழக வெளியீட்டை செய்தவர் அவர்தான். இன்று படம் தமிழில் வெளியாகாத நிலையில் மலையாளப் படத்திற்கான விமர்சனம் மற்றும் வரவேற்பைப் பொறுத்தே நாளை வெளியாக உள்ள தமிழ்ப் பதிப்பிற்கான வரவேற்பும் இருக்கும்.