'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ஆர்.சி-15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கியாரா அத்வானி. இவருக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த வாரத்தில் ராஜஸ்தானியில் உள்ள ஜெய்சல்மாரில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கியாரா அத்வானிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக, 'இது எங்களுக்கு இனிமையான ஆச்சரியம். அன்பை உணர்கிறேன். மிக்க நன்றி. உங்களிடம் நிறைய அன்பை இழந்துவிட்டேன் தோழர்களே' என்று பதிவிட்டுள்ளார் கியாரா அத்வானி.
இந்த நிலையில் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதையடுத்து ஆர்சி-15 படக்குழுவை சேர்ந்த, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம்சரண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோஹோத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பூக்களை அள்ளி தூவியபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், 'உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஒலியுடன் இருக்க வாழ்த்துகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.