என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் |

தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தான் நடித்து வருவதாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார் தமன்னா. அது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நான், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு கனவு போல் உள்ளது.
அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு முன்பு சைராவில் அவருடன் நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் இந்த போலா சங்கர் படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதோடு சிரஞ்சீவி உடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அதனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் பாடல் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.