தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரி அமலுக்கு வந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை போல் 10% டிடிஎஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, லலித் குமார், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் டில்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். அதில், திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பத்து சதவீதம் வசூலிக்கப்படும் டிடிஎஸ் தொகையை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.