ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
80களில் தமிழ் சினிமாவில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மேனகா. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தாலும் மலையளாத்தில் அதிகப் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருந்தார். மலையாளத் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தியும் அம்மாவைப் போலவே தென்னிந்திய மொழி நடிகைகளில் முன்னணியில் உள்ளார்.
நடிகை மேனகாவுக்கும் அவருடைய கணவர் சுரேஷுக்கும் இன்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். தனது பெற்றோரின் பிறந்தநாளை நள்ளிரவில் தனது பாட்டி, சகோதரி உறவினர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். புகைப்படங்கள், வீடியோவைப் பதிவிட்டு, “பெரும் ரொமான்டிக் ஜோடிகள் தங்களது வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி, பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா, அச்சா,” எனப் பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
கீர்த்தியின் அப்பா சுரேஷ் 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களைத் தயாரித்தவர். இந்த வருடம் மகள் கீர்த்தி கதாநாயகியாக நடித்த 'வாஷி' என்ற மலையாளப் படத்தைத் தயாரித்திருந்தார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.