நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரும் மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு இரண்டு விதமான வரி விதிகங்கள் இருந்தது. 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட் கட்டணங்களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட் கட்டணங்களுக்கு 18 சதவீத வரியும் இருந்தது.
அதை தற்போது 12 சதவீத வரி விகிதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளனர். ஆனால், 18 சதவீதம் இருக்கும் விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை, அப்படியேதான் இருக்கிறது. இதனால், சினிமா தியேட்டர்களுக்கு பெரிய பயன் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள்.
பெரும்பாலான தியேட்டர்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாகத்தான் டிக்கெட் கட்டணம் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களில்தான் 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணங்கள் உள்ளன.
18 சதவீத வரி என்று இருப்பதை குறைத்தால்தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது அதிகரிக்கும் என்கின்றனர். சமீபத்தில் தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்தது. அது போல ஜிஎஸ்டி வரியையும் மொத்தமாக 5 சதவீதத்திற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஏற்கெனவே திரையுலகம் நலிந்து வரும் நிலையில் இந்த வரிக்குறைவுப் அவசியம் தேவைப்படுகிறது என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.




