2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் சமீபத்தில், 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இதுபற்றி உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஹிந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங்கிடம் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர், ‛அதை என்னை பெத்தவங்க கிட்ட தான் கேட்கணும்.. அவங்களும் அதையேதான் கேட்கிறாங்க..' என பதிலளித்தார்.
ஜாக்கி பக்னானி தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.