நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டிரைய்டன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல்கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின் குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் செம்பி. தன் பேத்தியை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு மலைவாழ் பாட்டியின் கதை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அதன் பெயர் மறந்துபோய்விட்டது என்றால் அது பெரிய படம் இல்லை. 16 வயதினிலே படத்தில் நான் நடிக்கும்போது அதை சின்னப் படம் என்றார்கள். டிஸ்கோவெல்லாம் ஆடி நல்ல கமர்ஷியல் படங்களில் நடிக்கும்போது கோவணம் கட்டி நடிக்கலாமா என்று கேட்டார்கள். ஆனால் இப்போதும் அதை பெரிய படமாக கொண்டாடுகிறோம்.
இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது அதை தட்டி கேட்க வேண்டும் என்று சொல்கிற படம். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்.
என்னை விட பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.