சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
கல்கியின் சரித்திர நாவலை அதன் எழுத்து வடிவ பிரம்மாண்டத்திற்கேற்ப இயக்குனர் மணிரத்னம் படமாக்கியுள்ளதாக படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினார்கள். வழக்கமான 2டி படமாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை அகன்ற திரையான ஐமேக்ஸ் வடிவில் பார்க்க பலரும் ஆசைப்பட்டார்கள். படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னை வட பழனி, வேளச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் தலா ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் என இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்கள்தான் சென்னையில் உள்ளன. மற்றுமொரு அகன்ற திரையாக பி-எக்ஸ்எல் வடிவ தியேட்டர் ஒன்று அண்ணா நகரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகத்தில் உள்ளது. இந்த மூன்று தியேட்டர்களிலும் 'பொன்னியின் செல்வன்' காட்சிகள் இன்றோடு முடிவடைகிறது.
நாளை முதல் ஹாலிவுட் திரைப்படமான 'பிளாக் ஆடம்' திரைப்படத்தை இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிட உள்ளார்கள். கடைசி நாள் வரை ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் திரையீட்டை இன்றுடன் முடித்துக் கொள்வது அந்தப் படத்தை இன்னும் ஐமேக்ஸ் வடிவில் பார்க்காத ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.




