''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் பிரம்மாண்டத்திலோ, அதில் நடிக்கும் பெரிய நடிகர்களிடத்திலோ இல்லை என்பதை அவ்வப்போது சில படங்கள் நிரூபித்து வருகின்றன. ஒரு படத்திற்கு கதையும், அதைச் சொல்லும் விதமும்தான் முக்கியம் என்பதை சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' நிரூபித்திருக்கிறது.
சுமார் ரூ.15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மட்டுமே இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தும், மற்ற மாநிலங்களில் சுமார் ரூ.40 கோடி, வெளிநாடுகளில் ரூ.10 கோடி எனக் கடந்து ரூ.150 கோடிக்கும் அதிகமாக நிகர வசூலைப் பெற்றுள்ளதாம்.
'காந்தாரா' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இதற்கு முன்பு வெளிவந்து ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'கேஜிஎப் 2' படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடிக்கும் குறைவுதான். அந்தப் படத்திலேயே 1000 கோடி வரை, அதாவது 10 மடங்கு லாபம் பார்த்தார்கள். அது போல இப்போது 'காந்தாரா' படத்தின் மூலமும் ரூ.10 மடங்கு லாபத்தைப் பார்ப்பார்கள் என கர்நாடகா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.