என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படம் ஒரு வாரத்தில் 509 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக அளவிலான மொத்த வசூலை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்த வரையில் கர்நாடகாவில் 130 கோடி, ஹிந்தியில் 130 கோடி,தெலுங்கானா, ஆந்திராவில் 90 கோடி, வெளிநாடுகளில் 80 கோடி, தமிழகத்தில் 35 கோடி, கேரளாவில் 35 கோடிகளை இந்தப் படம் கடந்திருக்கும் என்று தகவல் சொல்கிறார்கள்.
கன்னடத் திரையுலகத்தில் 500 கோடியைக் கடந்த இரண்டாவது படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர் 1' பெற்றுள்ளது. இதற்கு முன்பு 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வசூலைப் பெற்றுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கன்னடப் படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இருப்பினும் இன்னும் 100 கோடி வசூல் கடந்த பிறகுதான் இந்தப் படம் லாபத்தில் அடியெடுத்து வைக்கும் என்பதும் கூடுதல் தகவல். சுமார் 350 கோடி வரை இப்படத்திற்கான தியேட்டர் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் படத்திற்கு மேலும் கூடுதல் தியேட்டர்களைக் கொடுத்துள்ளார்கள். இந்த வார இறுதி வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.