'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் |
விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் ஸ்ரீநிதி. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த தொடரானது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் அந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த ஸ்ரீநிதிக்கு விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குபிறகு வந்த புது சீரியல்களில் கூட வேறு ஹீரோயின்களே கமிட்டாகியிருந்தனர்.
இந்நிலையில் தான் ஸ்ரீநிதி ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவினார். இப்போது அந்த சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஸ்ரீநிதி தற்போது அதே சேனலில் மிக விரைவில் வெளியாகவுள்ள 'தெய்வம் தந்த பூவே' தொடரின் சீசன் 2 வில் ஹீரோயினாக நடிக்கிறார். முன்னதாக முதல் சீசனில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி மாற்றப்பட்டுள்ளார்.