மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

சமீபகாலமாக சோசியல் மீடியாவில் நடிகைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக சித்தரிப்பது அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற வேடத்தில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனும் சிக்கி உள்ளார்.
இவரது அந்தரங்க வீடியோ என்று இணையதளத்தில் சில போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின. அந்த வீடியோவை பார்த்துவிட்டு அது உண்மையான வீடியோ தான் என்றும், போலியோ வீடியோ என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி இன்ஸ்டாவில், ‛‛ஒரே முகசாயல் கொண்ட இரண்டு பெண்களின் வீடியோவை பதிவிட்டு இதில் உண்மை யார், ஏஐ யார் என கேட்டு, எது உண்மை, போலி என்பதை விளக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இதன்மூலம் தனது வீடியோ போலியானது என விளக்கி உள்ளார் ஸ்ருதி.
மேலும் மற்றொரு பதிவில், ‛‛மிகவும் கடனமான சூழலில் உள்ளேன். நானும் ஒரு பெண் தான். எனக்கும் உணர்வுகள் உள்ளன. இவற்றை காட்டுத் தீ போல பரப்பாதீர்கள். உங்களுக்கும் தாய், சகோதரி, தோழி, காதலி போன்ற பெண்கள் இருக்கலாம். அவர்களுக்கும் என் போன்று தான் உடல் உள்ளது'' என காட்டமான பதில் ஸ்ருதி நாராயணன் கொடுத்துள்ளார்.




