டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டான் படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பிரின்ஸ் திரைப்படம் வருகிற 21ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசி வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓரிரு போட்டிகளில் விளையாடினார்.