போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில், கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற ஆந்தாலஜி படம், அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் காளிதாஸ்.
இந்தநிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் காளிதாஸ். அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பத்துடன் ஒரு இளம்பெண்ணும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அதன்பின்னர் அந்தப்பெண் மாடலிங் துறையை சேர்ந்த தாரிணி காளிங்கராயர் என்பதும் அவர் காளிதாஸின் தோழி என்பதும் தெரிய வந்துள்ளது.
அதேசமயம் ஜெயராம் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய இந்த புகைப்படத்தை அந்த பெண்ணும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. இதைத்தொடர்ந்து காளிதாஸ் மற்றும் தாரிணி இருவரும் நண்பர்கள் மட்டும் தான் அல்லது அதையும் தாண்டி காதலிக்கிறார்களா என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..