ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்கிற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆஷா சரத். அதைத்தொடர்ந்து தமிழில் பாபநாசம், தூங்காவனம் மற்றும் மலையாளத்தில் திரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தே நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தவர். அதேசமயம் குடும்பம், நடிப்பு என சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து பயணித்து வருகிறார் ஆஷா சரத்.
இந்தநிலையில் தற்போது தனது குடும்பத்துடன் ஸ்வீடன் நாட்டில் விடுமுறையை கழித்து வரும் ஆஷா சரத் தனது 29 ஆவது திருமண நாளை தனது கணவர் சரத் வாரியருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை என்பதே ஒரு கொண்டாட்டம். என் கணவருடன் 29வது திருமண நாளை சுவீடனில் கொண்டாடி வருகிறேன். இந்த வாழ்க்கை பயணத்தில் சந்தோசம், மகிழ்ச்சி, வருத்தம், வலி என கடினமான மற்றும் மென்மையான பாதையில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பயணித்து இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் எங்களை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.




