ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாள நடிகர் சங்கத்திற்கு(அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2022 - 2025ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும், பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக ஜெயசூர்யாவும் அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 2 துணை தலைவர் பதவிக்கு மோகன்லால் அணி சார்பில் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து நடிகை மணியம் பிள்ளை ராஜு போட்டியிட்டார். இதில் ஆஷா சரத் தோல்வி அடைய மற்ற இருவரும் துணை தலைவராக வெற்றி பெற்றார்கள்.
11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். இதில் டொவினோ தாமஸ், லால், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். நிவின் பாலி, ஹனிரோஸ் தோல்வியடைந்தனர்.